-ச. எஞ்சல்-
MEDIA & PUBLICATION TEAM

  கோலாலும்பூர், 17 செப்டெம்பர்- புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவழிபாடு குழு ஏற்பாட்டில் திருவழிபாடு உறுமாற்றம் என்றோரு நிகழ்வு நடைப்பெற்றது. இது ஏபிசியிள் உள்ள "சோதர்" மண்டபத்திலும் "மேர்பி" எனும் மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வு காலை 9.00 மனிக்குத் தொடங்கி மாலை 4.30 மனியளவில் நிறைவுற்றது.இந்நிகழ்வு "திருச்சபையும் திருவழிபாடும்" என்ற கருப்பொருளுடன் நடத்தப்பட்டது.இவ்வினிய நிகழ்வின் வழி மக்களுக்கு தங்களின் திருவழிபாட்டின் முறையின் மீது விழிப்புணர்வை அதிகரிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

  சுமர் 56 விளழுக்காட்டு மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.அதாவது ஆங்கிலமும் மற்றும் தமிழ் மொழியும் கொண்ட ஒரு பிரிவு,தேசிய மொழியில் மற்றொரு பிரிவு. ஆங்கிலமும் தமிழ்மொழியும் கொண்டுள்ள பிரிவில் சுமார் 24 பங்ககேற்பாளர்கள் பங்கெடுத்தனர், தேசியமொழி பிரிவை எடுத்துக்கொண்டால் 32 பங்கேற்பாளர்கள் பங்கெடுத்தனர். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி பிரிவிற்குப் பேச்சாளராக திரு அர். கே. சாமி வருகைபுரிதிருந்தார். இதேபோல், தேசியமொழி பிரிவிற்குப் பிரதர் லெம்ஹொட் பேச்சாளராக வருகைபுரிந்திருந்தார்.

  இப்பயிற்ச்சியில், "திருவழிபாடு" என்பதைச் சொல்லாக மட்டும் சொல்லாமல் வாழ்க்கை நெறிகளுடன் இணைத்து அதற்கேற்ப நேர்த்தியான விளக்கம் இவ்விரு பேச்சாளர்கள் வழி மக்களுக்குக் கொண்டுச்செல்லப்பட்டது.அதுமட்டுமல்லாமல் திருவழிபாட்டிற்கு ஏற்ற உருமாற்றம் கோட்பாடுகளையும் பங்கேற்பாளரின் மனதில் பதிய செய்தது.மேலும், வத்திகன் இரண்டடின் கோட்பாடுகளைப் பற்றி அறியவும் இப்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருந்தது. இந்நிகழ்வின் இறுதியில் பேச்சாளரிள் ஒருவர் திருவழிபாட்டின் எதிர்காலம் திருசபையின் மிதும் உள்ளது என கூறினார்.

  இறுதியில் பங்கேற்பாளர்களின் கருத்தைக்கேட்ட போது,திருவழிபாடு முறையில் சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றாலும் அதற்கு ஏற்ற நேரம் தேவைப்படுகிறது என்று, ஜேம்ஸ் கிபெரியல்,எனும் 17 வயது நிறம்பிய பீடப்பணியாளர் தெரிவித்தார். மேலும் இருவர் திருவழிப்பாட்டின் அர்த்ததை நங்கு அறிந்துக்கொண்டோம் என்று நெலிகா அனில் மற்றும் நெலினிக்கா அனில் கூறினார்கள்.